Search This Blog

Tuesday 30 July 2013

அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?


1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!

... * தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

* எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

* கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

* புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.

* பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

* நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

* தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

* ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

* காலில் ஏதும் அணியாமல் இருந்து,,, நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

* உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

* எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

* எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

* அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

* எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

* எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

* வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

* எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

* உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

* நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

* இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா ? இல்லையா ? என்பதை இப்ப சொல்லுங்கள்???
 
 
 
Copied from Facebook page(https://www.facebook.com/eelampenkal)

காரணங்கள்!!!!

பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்கள் காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற் போல் உருவாக்கப்படலாம்....

Sunday 21 July 2013

நேரம்

நேரம் இரண்டு வகைப்படும்

1)நல்ல நேரம்

2)கெட்ட  நேரம் ,


ஒரு கெட்ட நேரத்திற்கு பிறகு நல்ல நேரம் வரும்....



-'நேரம்' திரைபடத்திலிருந்து....

வெற்றி வரும் வழி

வீழ்ந்தவனிடம் கேட்டுப் பார்
விழாதிருக்க வழி சொல்வான்
எழுந்தவனிடம் கேட்டுப் பார்
வாழ்வதற்கு வழி சொல்வான்
வலிகளிடம் கேட்டுப்பார்...
தவறுகளை எடுத்துரைக்கும்
பழிகளிடம் கேட்டுப்பார்
புல்லர்களை இனங்காட்டும்
சுமைகளைக் கேட்டுப்பார்
சுறு சுறுப்பை பதிலாக்கும்
கவலைகளைக் கேட்டுப்பார்
உறுதியினை எடுத்து வைக்கும்
குழப்பங்களைக் கேட்டுப்பார்
தெளிவு தனை முடிவாக்கும்
இருளினைக் கேட்டுப்பார்
விடியல்கள் காட்டி நிற்கும்
தோல்விகளைக் கேட்டுப்பார்
வெற்றி வரும் வழி சொல்லும்

-தமிழலை

Friday 19 July 2013

அச்சமில்லை (பண்டாரப் பாட்டு)

    

அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
 
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
 
துச்சமாக வெண்ணிநம்மைச் தூறுசெய்த போதினும்,
 
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
 
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
 
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
 
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
 
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
 
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
 
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
 
 அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
 
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
 

அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
 

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
 
 
எழுதியவர் :சுப்பிரமணிய பாரதி

காதலித்துப் பார்

காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...

காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...

காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...

இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...

இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்

காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்

காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...

நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...

உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...

காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...

ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...

தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...

காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...

அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...

அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..

அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே

செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...

காதலித்துப் பார்!



எழுதியவர் :வைரமுத்து

Notes:

உண்மை

 நம் அக்கறை சிரிக்ககூடாது என்பதில் இல்லை... உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது...

-கோபிநாத், 'ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதிங்க' என்ற புத்தகத்தில் இருந்து...  

அழகு

இயற்கையை மிஞ்சின அழகு எதுவும் இல்லை...
ஏனெனில் அது கடவுள் படைத்தது....

மனிதன்

  • மற்றவர்களுடன் ஒப்பிட்டு தன்னை தானே தாழ்த்தி கொள்பவன் 


  • சந்தோஷத்தையும் துக்கத்தையும் மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டு போலியான வாழ்கை வாழ்கிறான்.

  • கடவுள் கொடுத்த திறமைகளை தெரிந்து கொள்ள மறுப்பவன்.....

     
  • புதிதாய் எந்த ஒரு செயலையும்  செய்ய அஞ்சுபவன்...

  • பணம் இருப்பவன் ஆடுகிறான்
    இல்லாதவனோ ஆட்டுவிகபடுகிறான்...

PRAYER

When we start honouring God with the little time we do have He(JESUS) will multiply it...
-Joyce meyer
from 'the power of simple prayer'