Search This Blog

Thursday 8 January 2015

பெரியவர்

தவறு செய்பவர்
பெரியவர் ஆகிறார்
மன்னிப்பு கோரும்போது

மு.சுரேஸ்

Sunday 23 November 2014

எனது பார்வையில் உலகம்.-பாகம் 1

இந்த உலகத்தில் மனிதன் வாழ அனைத்தும் இருக்கிறது., அதை அடைவது எப்படி  என்ற தேடல்தான் வாழ்க்கை

மு.சுரேஷ்

Wednesday 28 August 2013

haikoo.....

* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்னும் பிச்சையெடுக்கிறது
யானை..

* ஆணி குத்திய கால்களுடன்
செருப்பு தைக்கும் சிறுவன்..

* ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும்
முத்தமிட ஒரு குழந்தைகூட இல்லை
முதியோர் இல்லத்தில்..

* அழைத்த குரலுக்கு ஓடி வர
ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்கு போராடி இருந்து கிடந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்.

* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.


* குங்குமம் வர இதழை
விரும்பி படிக்கும் வாசகி
விதவையானாள்.

*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள்
இன்று உண்ணாவிரதம்.

* அதிக வலிஎடுக்கிற போது
அம்மா என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை.




from facebook.....

Tuesday 30 July 2013

அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

அழகிய நாட்கள் மீண்டும் வந்திடாதோ?


1990க்கு முன்பு பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் நம்மை பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே!

... * தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

* எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

* கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

* புத்தகங்களை சுமக்கும் பொதி மாடுகளாக இருந்ததில்லை.

* பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

* நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

* தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

* ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

* காலில் ஏதும் அணியாமல் இருந்து,,, நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

* உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

* எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

* எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

* அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

* எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

* எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

* வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

* எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

* உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

* நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

* இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா ? இல்லையா ? என்பதை இப்ப சொல்லுங்கள்???
 
 
 
Copied from Facebook page(https://www.facebook.com/eelampenkal)

காரணங்கள்!!!!

பிடிக்கவில்லை என விலகி செல்பவர்களிடம் காரணம் கேட்காதீர்கள் காரணங்கள் அவர்களுக்கு தகுந்தாற் போல் உருவாக்கப்படலாம்....

Sunday 21 July 2013

நேரம்

நேரம் இரண்டு வகைப்படும்

1)நல்ல நேரம்

2)கெட்ட  நேரம் ,


ஒரு கெட்ட நேரத்திற்கு பிறகு நல்ல நேரம் வரும்....



-'நேரம்' திரைபடத்திலிருந்து....